Friday, August 9, 2013

அளவற்ற அருளாளனும்...நிகரற்ற அன்புடையோனுமாகிய...அல்லாஹ்வின் திருப்பெயரால்...



அளவற்ற அருளாளனும்...நிகரற்ற அன்புடையோனுமாகிய...அல்லாஹ்வின் திருப்பெயரால்...

முகநூலிலும்...இன்னும் ஊடகத்திலும்...சில கயவாளிகள்..இஸ்லாத்தில் அனுமதிக்கப்பட்டுள்ள (கட்டாயம் அல்லாத)....பலதாரமணத்தையும்..நபி(ஸல்) அவர்களையும் கொச்சைப்படுத்திவருகின்றனர்....அவர்களுக்கும்.....மாற்று மத சகோததரர்களுக்கான ஒரு பதிலாகவும்...நம் முஸ்லிம் சகோதரர்கள் தெரிந்துகொள்ளவதர்க்காகவும்...ஒரு சிறு கட்டுரை முயற்சி...

நபி(ஸல்) அவர்கள் தான் முதன்முதலில் பலதாரமணம் புரிந்தார்கள்... அல்லது....பலதாரமணத்தை நபி (ஸல்) அவர்கள் தான் உலகில் முதன் முதலில் தொடங்கி வைத்தார்கள்...... என்ற ஒரு பொய்யான தோற்றத்தை இஸ்லாத்தின் மேல் உள்ள காழ்ப்புணர்ச்சியால் சிலர் அவதூராக பரப்பிவருகின்றனர்..

நபி(ஸல்) அவர்களின் காலத்திர்க்கு முன்பே பலதாரமணம் புரிவது அன்றைய அரபு சமூகத்தில் இருந்தது.. பலதாரமணத்தை பற்றி பார்ப்பதர்க்கு முன்... அக்காலத்தில்.. அரபு சமூகத்தில்.. (மற்றும் வெளியுலகத்தில்).....பெண்களின் நிலை எவ்வாறு இருந்தது...என்பதை முதலில் பார்க்கவேண்டும்...

(1) பெண்களை ஒரு மனித இனமாகவே மதிக்காத...பெண் குழந்தைகளை... பிறந்தவுடன்...மண்ணில் புதைக்கும் இருண்ட காலம் அது... இந்திய கிராமங்களில்..கள்ளிப்பால் கொடுத்த காலம் போல்...

(2) 1400 வருடங்களுக்கு முன் அரபி சமூகம்... பெண்களை-தாய்..மனைவி..சகோதரி...தனக்கு பிறந்த பெண் மக்கள்...அனைவரையும்...உணர்ச்சியற்ற....ஒரு ஜடப்பொருளாக கருதிய காலம் அது. 

(3) பெண்களை தங்கள் இஷ்டத்திற்க்கு (வரமுறையின்றி) மணம் முடிப்பதும்..அவர்களை பின் திருமணபந்தத்தை முறித்து விடுவதும் வழக்கத்தில்இருந்தது...மதுவும்...மாதுவும்.. விபச்சார செய்வதும்...சமூகத்தில் அந்தஸ்து கொண்டவையாக வழக்கத்தில் இருந்த காலம் அது...

(4) பல பெண்களை(கணக்கில்லாமல்) மணமுடித்தவரை அக்கால கட்டத்தில் சமூக அந்தஸ்த்தில் உயர்ந்தவராக எண்ணிய கால கட்டம் அது..

நபி (ஸல்) அவர்கள் இந்த காட்டு மிராண்டிதனமான செயல்களை...1400 வருடங்களுக்கு முன் சட்டங்கள் மூலமாக...தடுத்தார்கள்...

(1) பெண் பிள்ளைகள்..அபிவிருத்தியான...விலைமதிப்பில்லாத ஒரு செல்வம் என்று போதித்தார்கள்.. எவரொருவர்.. பெண் பிள்ளையை.. பெற்றெடுத்து...வளர்த்து..அதர்க்கு கல்வி அளித்து...திருமணம் முடித்து கொடுக்கிராரோ அவர்களுக்கு சொர்க்கத்தில் நிலையாக தங்குவார் ...என்ற நற்செய்தியை கூரினார்கள்... (இதனால் பச்சிலம் பாலகர்கள்....பெண்குழந்தைகள் கொல்லப்படுவது முற்றிலும் தடுக்கப்பட்டது...)

(2) மேலும்...பெண்களை மணமுடிக்கும் போது ஒரு ஆண் தான் பெண்ணிர்க்கு "மஹர்" மணக்கொடையை அளிக்கவேண்டும் என்று கூரினார்கள்... (இதனாலும்.. வருமையை காரனம்காட்டி...பெண் குழந்தைகள் கொல்லப்படுவது முற்றிலும் தடுக்கப்பட்டது...)

(3) பெண்களுக்கும் ஆண்களை போல் சொத்தில் பங்கு உண்டு என்று கூறினார்கள்..( அதற்க்கு முன் வரை தகப்பன் சொத்தில் ஆணகளுக்கு மட்டுமே பங்கு என்னும் எழுதப்படாத ஒரு சட்டம் அக்காலத்தில் வழக்கத்தில் இருந்தது...( இந்த சட்டத்தால்...பெண்களும் அக்கால ஆண்கலுக்கு நிகராக.... சகல சொத்து பத்து..நிலம்..தோட்டங்களை... பெற்று வாழும் நிலையை அடைந்தனர்...)

(4) ஒரு தாயின் காலடியில் தான் சொர்க்கம் உள்ளது என்று நபி (ஸல்) அவர்கள்.. கூறினார்கள்... தாயிர்க்கு பணிவிடை செய்வதின் மூலம்... கண்ணியப்படுத்துவதின் மூலம் தான் ஒருவனுக்கு சொர்க்கம் கிடைக்கும்...என்றும்... தாய்.. தந்தை.. இவரகளின் பொருத்தத்தில் தான் இறைவனின் பொருத்தம் உள்ளது என்றும் கூறினார்கள். ( அதற்க்கு முன்புவரை...தாயையும் பெணணாகவே கருதி இழிவாக கருதி வந்தனர்..அரபிகள்...)

(5) விதவைகள்...ஏழைப்பெண்கள்.. கனவனால் கைவிடப்பட்ட பெண்களுக்கு ஆதரவு தறுமாரும்....அப்பெண்களுக்கு முன்னுரிமை கொடுத்து... அவர்களை திருமணம் செய்யவேண்டும் என்று சட்டம் போட்டர்கள்..

நமது காலத்தில் தலைவனுக்கு ஒரு சட்டம்... தொண்டனுக்கு ஒரு சட்டம்... மேடையீல் முழங்கும் தலைவன்.. தன் சொந்த வாழ்வில் அவன் முழங்கிய... அவன் ஏற்ற கொள்கைகளை பின்பற்றி வருகின்றானா என்றால்...எந்த ஒரு தலைவனும் பின்பற்றுவது இல்லை....சுய ஒழுக்கமோ...குடும்பவாழ்வில் நேர்மையோ...யெதுவும் கிடையாது இதுதான் உண்மை...

(6) ஆனால்.... நபி (ஸல்) 25 வயதில் மணமுடித்தது தன் வயதை விட மூத்த வயது கொண்ட அன்னை கதிஜா (ரலி) அவர்களை...

(7) விதவைகளை..ஏழை..பெண்களை...கனவனால் கைவிடப்பட்ட பெண்களை....மணமுடியுங்கள் என்று தன்னை பின்பற்றியவர்களுக்கு கூறியது மட்டும் இல்லாமல் தானே அதை செயலும் படுத்தினார்கள்... விதவைகளை மணமுடித்தார்கள்... 
50 வயது வரை அன்னை கதிஜா (ரலி) அவர்களூடன் தான் அவர்களின் திருமண உறவு இருந்தது இங்கு குறிப்பிடதக்கது...

திருமணத்தால் தவிற்க்கப்பட்ட போர்கள்...உயிர் பலிகள்....

(8) நபி (ஸல்) அவர்கள்...மணமுடித்த பெண்களை கூர்ந்து ஆராய்ந்து பார்த்தால்.. பல சமூகங்களை.. கோத்திரங்களை...சார்ந்த...பெண்களை தான் மணமுடித்திருந்தார்கள் என்பது தெளிவாகும்... குலப்பெருமைகள்... கோத்திரப்பெருமைகள்...பெசி அடிக்கடி சண்டை சச்சரவுகளில் ஈடுபட்டு வந்த அக்கால அரபி சமூகத்தினரிடையே திருமணம் பந்தத்தின் மூலம் சமூகங்களிடையே...கோத்திரங்களிடையே...ஒற்றுமையை... ஏர்ப்படுத்தினார்கள்.. இதனால் காலவாக்கில்.. குலம் ..கோத்திரம் பெருமை பேசிவந்தது...முற்றாக ஒழிந்தது...
தனது.. பெண்கள் அல்லது ஆண்களை மணமுடித்த ஊரில்... அல்லது சமூகத்தில் சண்டையிடுவதோ...அல்லது போர்புரிவதோ...இகழ்வான ஒன்றாக அக்காலத்தில் கருதப்பட்டது... 
இவ்வாறாக பல உயிர்ச்செதங்களூம்.. பொருள் சேதங்களும்.. தவிர்க்கப்பட்டு... இனங்களுக்கிடையே ஒற்றுமை ஓங்கியது...

( நம் தமிழகத்தில் இன்றும் ஒரே ஹிந்து மதத்திலேயே உயர் சாதி..தாழ்ந்த சாதி.. உயர் குலம்.. தாழ்ந்த குலம் திரும்ணங்களை பலரும் எதிர்த்து வருகின்றனர்...பல கலவரங்கலும் இதனால் அடிக்கடி ஏர்படுகிறது...)

நபி (ஸல்) அவர்கள் பலரை திருமணம் செய்து இருந்தாலும்... நான்கு மனைவிகளுக்கு மேல் ஒரே காலக்கட்டத்தில் வாழவில்லை... (அதாவது ஒரு மனைவி இறந்தவுடன்...மறு திருமணம் செய்துள்ளார்கள்..

(9) அதுபோல முஸ்லிம்களின் தாய் அன்னை ஆயிஷா(ரலி) அவர்களை.. சிறுமியாக இருந்த போது...மணமுடித்தார்கள்... மற்ற திருமணங்களை பல்வேறு நோக்கத்திர்க்காக அதாவது... விதவைகள்...ஏழை... கனவனால் கைவிடப்பட்ட பெண்கள் என்று மணமுடித்திருந்தார்கள்....சமூகங்கள்...இனங்கள்...கோத்திரங்களுக்கு இடையே ஒற்றுமை ஏர்ப்படும் நோக்கத்தில் மணமுடித்து இருந்தார்கள்...மணமுடித்த மனைவிகளின் வயதும் நபி (ஸல்) அவர்களின்...வயதை ஒத்து இருந்தது....அல்லது அதை விட வயது உயர்ந்ததாக இருந்தது...

நபி (ஸல்) அவர்கள் தான் நமக்கு..முஸ்லிம்களுக்கு முன்மாதிரி... (ரோல் மாடல்)...நபி (ஸல்) அவர்களின் போதனைகளை.. ஒவ்வொறு முஸ்லிமும் பின்பற்றி நடக்கவேண்டும்... வீட்டிர்க்கு வெளியே செய்த போதனைகள்..அனைவருக்கும் எட்டியது... அவ்வாறு வீட்டிற்க்கு வெளியே...செய்த போதனைகள் ....அரசியல்...தனிமனித...சமயம்...வணக்க வழிபாடுகள்...வாழ்வியல்கள்...பொருளாதார...மற்றும் ஏனைய துறைகளை சார்ந்த செய்திகளாக அனைவருக்கும் சென்றடைந்தது...எட்டியது... 

ஆனால்...வீட்டிர்க்கு உள் நடக்கும்...சூழ் நிலைகள்...பிரச்சினைகள்...குடும்பவியல்...கனவன் மனைவி...உறவுகள்...அதன் சிக்கல்கள்.. அதர்க்கான போதனைகள்.. அதர்க்கான தீர்வுகள்...சட்டங்கள்... அன்னை ஆயிஷா (ரலி) அவர்கள் மூலம் தான் வெளி நபர்களுக்கு எட்டியது... இயல்பாகவே அன்னை ஆயிஷா (ரலி) அவர்கள்.. நிரைந்த ஞாபக சக்தி மிக்கவராகவும்.. வயதில் இளைத்தவராக இருந்ததாலும்...நிறைய (ஹதீஸ் என்னும் ) செய்திகளை...அறிந்தவராக...ஒரு அறிஞராக இருந்துள்ளார்கள்... 
நபி (ஸல்) அவர்களின் மறைவுக்கு பின்....அன்னை ஆயிஷா(ரலி) அவர்கள்.. மூலமாக...குடும்பவியல்...கனவன்...மனைவி...சிக்கல்கள்.. அதர்க்கான தீர்வுகள்... சட்டங்கள்... மற்றவர்களுக்கு எட்டியது என்றால்... அது மிகையாகாது...
இந்த ஒரு காரணத்திர்க்காகவும்... எல்லாம் வல்ல அல்லாஹ்...அன்னை ஆயிஷா(ரலி) அவர்களை கொண்டு நபி (ஸல்) அவர்களின் இல்லற போதனைகளை...வெளியுலகுக்கு...முஸ்லிம்களுக்கு தெரியப்படுத்தினான்... ( அல்லாஹ்வே மிக அறிந்தவன்...)

(10) இஸ்லாத்தை தவிர்த்து உலகில் வேறு எந்த ஒரு மதமோ...தனி மனித கொள்கையோ.....ஒருவன்...நான்குக்கு மேல் பெண்களை...திருமணம் முடிக்ககூடாது என்று கூறவில்லை.... அவர்கள்.. திருமணம் முடிப்பது ஒன்றாக இருந்தாலும்... திருமண பந்தமின்றி.. எத்தனை பெண்களூடனும் தொடர்பு வைத்திருக்க முடியும்....

(11) இஸ்லாம் நான்கு திருமணத்திர்க்கு அனுமதி அளித்துள்ளதே அன்றி...(அனுமதி மட்டும் தான்)....ஒவ்வொருவரும் நான்கு திருமணம் கட்டாயமாக செய்து தான் ஆகவேண்டும் என்று சட்டமில்லை...

(12) நம் காலத்தில் இருக்கும் தலைவர்களே....ஒருவனுக்கு ஒருத்தி என்று மேடையில் முழங்கி...திருமணபந்தத்தில்..சட்டப்பூர்வமாக.....மனைவி...என்று ஒருத்தியையும்... திருமண பந்தம்...சட்டப்பூர்வமின்றி....துணைவி...இணைவி என்று....ஒன்றுக்கு மேர்ப்பட்ட பெண்களுடன் வாழ்ந்து வருவது நாம் எல்லோரும் அறிந்ததே...

(13) இறுதியாக...இஸ்லாம் மட்டும் தான் பலதாரமணத்தை ஆதரிக்கிறது என்பது... என்பது... ஒரு மாபெரும் மூடத்தனம்...பொய் பிரச்சாரம்....உலகில் தோன்றிய மதங்களில்... கலாச்சாராங்களில்... ஒரு ஆண்.. ஒன்றுக்கு மேர்ப்பட்ட பெண்களை மணமுடித்துள்ளான்... இது இயற்க்கைக்கு மாற்றமானது அல்ல... ஒரு பெண் பல ஆண்களை மணமுடித்தால் தான் அது இயற்க்கைக்கு... சமூகத்திற்க்கு... மாற்றமான செயல்... என்பது சிந்தித்து பார்த்தாலே விளங்கும்...
Top of Form
Unlike ·  · Share · 21 minutes ago

No comments:

Post a Comment