Friday, August 9, 2013

பல்பு உடைஞ்சு போச்சுன்னா

பல்பு உடைஞ்சு போச்சுன்னா ...
சி. எஃப். எல். பல்புகள் கைத்தவறி விழுந்து உடைந்துவிட்டால் , உடனே அந்த இடத்தை விட்டு வெளியேறிவிட வேண்டும் என்று பிரிட்டிஷ் சுகாதாரத்துறை எச்சரித்துள்ளது . ஏனென்றால் இந்த பல்புகளுக்குள் உள்ள மெர்க்குரி திரவம் , ஆர்சனிக் , துத்தநாகத்தைவிட அதிக விஷத்தன்மையுள்ளது . இந்த விஷத்தை நுகர்ந்தாலோ அல்லது சருமத்தில் பட்டாலோ , மைக்ரேன் தலைவலி , மூளை பாதிப்பு , உடல் அசைவுகள் , பாதிக்கப்பட்டு நிலை தடுமாறுதல் போன்றவை ஏற்படுமாம் . அலர்ஜி பிரச்னை உள்ளவர்களுக்கு சரும பாதிப்புகளும் ஏற்படுமாம் .

சி. எஃப். எல் .பல்புகள் உடைந்துவிட்டால் என்ன செய்ய வேண்டும் ?

*
உடனே அந்த அறையிலிருந்து வெளியேறி விட வேண்டும் . அந்த நெடி மூக்கில் ஏறக்கூடாது . பதினைந்து நிமிடங்கள் ஆனபின் அப்புறப்படுத்தலாம் . நொருங்கிக் கிடக்கும் கண்ணாடித் துகள்கள் காலில் படாமல் பார்த்துக் கொள்ளவும் .

*
வேக்வம் க்ளீனரால் சுத்தப்படுத்தக் கூடாது . வேக்வம் உறிஞ்சப்பட்டால் , அது உள்ளே ஒட்டிக்கொள்ளும் . அதைத் திரும்ப உபயோகிக்கும் போது மெர்க்குரித் துகள்கள் மற்ற அறைகளுக்கும் பரவி , மிக மோசமான உடல் உபாதைகளை ஏற்படுத்தும் .

*
கைகளில் ரப்பர் கிளவுஸ் போட்டுக்கொண்டு சாதாரண துடைப்பத்தால் சுத்தப்படுத்தலாம் .

*
உடைந்தத் துகள்கள் மற்றும் திரவத்தை ஒரு பிளாஸ்டி பையில் சேகரித்து , ' சீல் ' செய்யவும் . சாதாரண குப்பைத் தொட்டியில் போடாமல் , கார்ப்பரேஷன் ' ரீசைக்ளீங் பின்' னில் கொண்டு சேர்த்தால் , அவர்கள் பாதுகாப்பாக அப்புறப்படுத்தி விடுவார்கள்

உங்களுக்கு தெரியுமா?… கர்ப்பத்தில் இருக்கும் சிசு சுவைப்பதில் கில்லாடியாம்!

உங்களுக்கு தெரியுமா?… கர்ப்பத்தில் இருக்கும் சிசு சுவைப்பதில் கில்லாடியாம்!
[Monday, February 18, 2013 7:24 PM]
unburn_child_001.w245
கர்ப்பத்தில் இருக்கும் சிசுவுக்கு சுவைகளை அறியும் திறன் இருக்கிறது என்பது லேட்டஸ்ட் ஆய்வில் தெரியவந்துள்ளது. கசப்பு, துவர்ப்பு ஆகிய சுவைகள் கர்ப்பத்தில் இருக்கும் சிசுவுக்கு பிடிப்பதில்லை என்றும் தெரிய வந்திருக்கிறது.
கர்ப்பத்தில் உள்ள சிசுவின் வளர்ச்சி, தாயின் மனநிலையை பொருத்தது என்று அறிவியல்பூர்வமாக உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் கர்ப்பிணிகள் எப்போதும் நல்ல சிந்தனை, ஆரோக்கிய உணவில் அதிக கவனம் செலுத்த வேண்டும். நல்ல, இனிமையான இசையை கேட்க வேண்டும் என்கிறார்கள் மருத்துவர்கள்.
பொதுவாக கர்ப்ப காலத்தில் தாய், சேய் என 2 உயிர்களையும் பாதுகாப்பாக, அதிக கவனத்துடன் கவனித்துக் கொள்ள வேண்டியது அவசியம். இந்த கட்டத்தில் கருவில் உள்ள சிசுவுக்கு தாயின் உணர்ச்சிகளை புரிந்து கொள்ளும் திறன் உள்ளதை பல ஆய்வுகள் தெரிவித்துள்ளன.
கர்ப்ப காலத்தில் கருவில் உள்ள சிசுவுக்கு உணவும் தாயின் மூலமே கிடைப்பதால் தாய் ஊட்ட சத்துள்ள உணவுகளை எடுத்து கொள்வது ஆரோக்கியமான குழந்தை பிறக்க வழிவகுக்கும். பிறந்த பின்பும் தாய்ப்பால் மூலம் குழந்தைக்கு தேவையான ஊட்டச்சத்து கிடைக்கிறது.
இந்நிலையில் கர்ப்பத்தில் உள்ள போதே சிசுவுக்கு காய்கறிகள், பழங்கள் உள்ளிட்டவற்றின் உப்பு, இனிப்பு, சுவைகளை அறியும் திறன் இருக்கிறது. கர்ப்பத்தில் இருக்கும் போது கிடைக்கும் சுவையையே குழந்தை பிறந்து வளரும் போது அதிகம் விரும்புகிறது என்று சமீபத்திய ஆய்வில் உறுதியாகி உள்ளது. கசப்பு, துவர்ப்பு சுவைகள் கர்ப்பத்திலேயே குழந்தைகளுக்கு பிடிப்பதில்லை என்பதும் ஆய்வில் தகவல் வெளியாகி உள்ளது.
அமெரிக்காவின் பிலடெல்பியாவில் உள்ள மோன்னெல் என்ற மருத்துவ ஆராய்ச்சி மையம் இதுகுறித்த ஆய்வை மேற்கொண்டது. டாக்டர் மோனெல்லா தலைமையில் நடந்த இந்த ஆய்வில், 6 மாதம் முதல் ஒரு வயது வரை உள்ள 46 குழந்தைகளின் பிடித்தமான உணவு சுவை குறித்து அலசி ஆராயப்பட்டது.
கர்ப்ப காலத்தில் தாயின் உணவு முறை குறித்தும் இந்த கணக்கெடுக்கப்பட்டது. கர்ப்ப காலத்தில் தாய் எடுத்துக் கொண்ட உணவு வகைகளில் குழந்தைகளுக்கு அதிக நாட்டம் இருந்தது உறுதியானது.  குறிப்பாக அதிக அளவில் கேரட் எடுத்துக் கொண்டவர்களின் குழந்தைகளுக்கு அந்த சுவை மற்றும் நறுமணத்தில் அதிக நாட்டம் இருந்தது.
இதே போன்று பலவிதமான காய்கறிகள் மற்றும் பழங்களை கொண்டு குழந்தைகளின் பிடித்தமான சுவை குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டதில் எதிர்பார்த்த வெற்றி கிட்டியது. இதன் மூலம் கர்ப்பத்தில் உள்ள சிசுவுக்கு சரிவிகித ஊட்டச்சத்து அளிக்க வேண்டியதன் அவசியம் தெளிவாகி உள்ளது.
இனிப்பு, புளிப்பு, காரம், உவர்ப்பு, துவர்ப்பு, கசப்பு என எல்லா விதமான சுவைகளையும் கர்ப்ப காலத்தில் சிசுவுக்கு அறிமுகப்படுத்த வேண்டியது தாயின் கடமை என்கிறார் டாக்டர் மோனெல்லா.


இந்து மதம் என்பது வெறுமனே நம்பிக்கை சார்ந்த மார்க்கம் அல்ல..

இந்து மதம் என்பது வெறுமனே நம்பிக்கை சார்ந்த மார்க்கம் அல்ல...அது வாழ்க்கையின் ஆணிவேரில் இருந்து உச்சிக்கிளை வரை வழிகாட்டும் இனிய மதம்...காமம்,காதல்,விஞ்ஞானம்,ஆன்மீக அமைதி,தியான வழிமுறைகள் என ஒவ்வொரு வகையிலும் இந்துமதம் தன் பங்களிப்பை வழங்கி உள்ளது 

விஷ்ணுவின் முதல் அவதாரம் மச்ச அவதாரம். உலகின் முதல் உயிர் வாழ்க்கை நீரிலேயே உருவானதாக விஞ்ஞானம் கூறுகிறது 

இரண்டாவது கூர்ம அவதாரம், கூர்மம் என்றால் ஆமை. ஆமையானது நீரிலும் நிலத்திலும் வாழக்கூடியது. இது உயிர் வாழ்க்கையானது நீரில் இருந்து நிலத்திற்கு பரவியமையைக் காட்டுகிறது .

மூன்றாவது வராகம். இது நிலத்தை குடைந்து சென்றதாக கூறுகிறது இந்து மதம்...அதாவது பன்றி அவதாரம். இது உயிரினங்கள் நீரிலிருந்து முற்றும் முழுதாக நிலத்தில் வாழ இயைபாக்கம் அடைந்த நிலையை எடுத்துக்காட்டுகிறது.

நான்காவது நரசிம்மம். இது அரை மனித அரை மிருக உருவமாகும். இது உடல் ரீதியாக விலங்கு நிலையில் இருந்து மனித உருவமாக பரிணாம வளர்ச்சி அடைந்ததை எடுத்துக்காட்டுகிறது.

ஐந்தாவது வாமன அவதாரம். இது குள்ள மனித அவதாரம். இது மிருக சுபாவம் கொண்ட மனித உருவத்தில் இருந்து புத்தி கூர்மை உள்ள மனித இனமாக மாறிய நிலையை உணர்த்துகிறது. 

ஆறாவது பரசுராம அவதாரம். அவர் கையில் கோடரி கானப்படுகிறது . 
இது காடுகளில் மிருகங்களை வேட்டை ஆடித்திரிந்த மனித நாகரீகத்தின் படி நிலையை பிரதிபலிகிறது.

ஏழாவது ராம அவதாரம். மனித மேம்பாட்டின் அடுத்த படி நிலையாக மனிதன் ஆயுதங்களை உருவாக்கப் பழகிக் கொண்ட நிலையையும், கிராமங்கள் மற்றும் சமூகக் கட்டமைப்புகள் உருவாகத் தொடங்கிய நிலையையும் உணர்த்துகிறது.

எட்டாவது பலசுராம அவதாரம். அதில் பரசுராமர் கலைப்பையுடன் காணப்படுகிறார். இது மனித நாகரீகத்தில் விவசாய அபிவிருத்தி ஏற்பட்டதைக் காட்டுகிறது.

ஒன்பதாவது கிருஷ்ண அவதாரம். அதில் கிருஷ்ண பகவான் பசுக்களுடன் காணப்படுகிறார். அது மனிதன் மிருகங்களை வீட்டுத்தேவைகளுக்காக பயன்படுத்தத் தொடங்கியமையையும், கால் நடை வளர்ப்பை மேற்கொண்டமையையும் , அன்று நிலவிய பொருளாதார மேம்பாட்டையும் காட்டுகின்றது.

இறுதியாக அதாவது பத்தாவது அவதாரமாக நாம் எதிர்பார்த்திருப்பது கல்கி அவதாரம். இதில் கல்கி பகவான் தேவதாதி என்னும் வேகமான குதிரையில் வந்து உலகை அழிப்பார் என நம்பப்படுகிறது. இன்று இடம்பெரும் இயற்கை அழிவுகளும் மனிதனால் மேற்கொள்ளப்டும் அழிவை நோக்கிய செயற்பாடுகளும் இதற்கான அறிகுறிகளாக இருக்கின்றன. 

இதைவிட குரங்கிலிருந்து மனிதன் வந்தான் என கூறப்பட்ட கருத்தை கூட இந்து மதம் வானரம் என்று கூறப்படும் அனுமன்,வாலி,சுக்கிரீவன் போன்ற கதாபாத்திரங்கள் மூலம் உலகிற்கு சொன்னது....

தர்மத்தின் பாதையில்

ஜப்பானைப் பற்றிய இந்த அழகான தகவல்களை வாசியுங்கள்...

ஜப்பானைப் பற்றிய இந்த அழகான தகவல்களை வாசியுங்கள்...

1.
ஜப்பானில் மாணவர்கள் தங்கள் ஆசிரியர்களுடன் சேர்ந்து ஒவ்வொருநாளும் பதினைந்து நிமிடங்கள் தங்கள் பாடசாலை மற்றும் கழிவறைகளை சுத்தம் செய்கிறார்கள்.

2.
ஜப்பானில் நாய் வளர்ப்பவர்கள் அதன் கழிவுகளை அகற்றுவதற்காக வெளியில் செல்லும்போது விசேட பை ஒன்றினை கட்டாயமாக எடுத்துச் செல்வர்.

3.
ஜப்பானில் சுகாதார ஊழியர்கள் சுகாதார பொறியியலாளர்என அழைக்கப்படுகிறார். அவரது சம்பளம் அமெரிக்க டொலரில் 5000/-இலிருந்து 8000/- வரை ஆகும். ஒரு சுத்தபடுத்துனர் எழுத்து மற்றும் வாய் மொழிமூல பரீட்சையின் பின்னரே தெரிவு செய்யப்படுகிறார்.

4.
ஜப்பானில் இயற்கை வளங்கள் என்று எதுவும் இல்லை.அத்துடன் வருடத்திற்கு நூற்றுக்கணக்கான பூமி அதிர்ச்சிகள் அங்கு ஏற்படுகின்றன.ஆனால் ஜப்பான்தான் உலகிலேயே இரண்டாவது பெரிய பொருளாதார நாடாகும்.

5.
ஜப்பானில் முதலாம் ஆண்டு தொடக்கம் ஆறாம் ஆண்டு வரையான மானவர்களுக்கு மற்றவர்களுடன் எப்படி பழக வேண்டும் என சொல்லிக் கொடுக்கப்படுகிறது.

6.
ஜப்பான் மக்கள் உலகிலேயே மிகப் பெரிய பணக்காரர்களாக இருந்தாலும் அவர்கள் ஒருபோதும் தங்களுக்கென்று வேலைக்காரர்கள் வைத்துக் கொள்வதில்லை. பெற்றோரே வீட்டையும் பிள்ளைகளையும் கவனித்துக் கொள்வர்.

7.
ஜப்பான் பாடசாலைகளில் முதலாம் ஆண்டிலிருந்து மூன்றாம் ஆண்டுவரை பரீட்சைகளே இல்லை.கல்வியின் நோக்கம் விடயங்களை அறிந்து கொள்ளவும் ஒழுக்க நெறிகளை கற்றுக் கொள்ளவும்தானே தவிர பரீட்சை மூலம் அவர்களை தரப்படுத்தவல்ல என்கிறார்கள்.

8.
ஜப்பானில் மக்கள் உணவுக் கடைகளில் எந்தவிதத்திலும் உணவை வீணாக்காமல் தமக்குத் தேவையானதை அளவில் மட்டும் சாப்பிடுகிறார்கள். உணவு வீணாதல் என்பதே அங்கு இல்லை.

9.
ஜப்பானில் சராசரியாக ஒரு வருடத்தில் புகையிரதங்கள் தாமதமாக வந்த நேரம் ஆகக் கூடியது சுமார் 7 வினாடிகள் மாத்திரமே.

10.
ஜப்பானில் மாணவர்கள் பாடசாலையில் சாப்பிட்ட பின் உடனேயே அங்கேயே பல் துலக்குகிறார்கள்.அவர்களுக்கு சாப்பிடும் உணவு சரியாக சமிபாடு அடைய வேண்டும் என்பதற்காக சாப்பிடுவதற்கு அரை மணித்தியாலம் ஒதுக்கப்படுகிறது.

மனதை உருக்கிய ஒரு உண்மைச்சம்பவம்

மனதை உருக்கிய ஒரு உண்மைச்சம்பவம்

சிங்களத்  தாயாரை தேடி வந்த தமிழகத்து சந்திரவதி
மணி ஸ்ரீகாந்தன்

தமிழ், சிங்களம் என்ற இந்த இரண்டு இனங்களின் முன்னோடிகளும் இந்தியாவிலிருந்து வந்து இலங்கையில் குடியேறினார்கள் என்பதே வரலாற்று ஆய்வாளர்களின் முடிவு.

முகத்தோற்றம், கலாசாரம், மதம், பல பழக்கவழக்கங்கள், சொற்களில் காணப்படும் ஒற்றுமை என இந்தியர்களுக்கும் சிங்களவர்களுக்கும் இந்து-பௌத்த மதங்களுக்கும் இடையே நிறைய ஒற்றுமை உள்ளது. 

மொழியில் தான் தமிழர்களும் சிங்களவர்களும் வேறுபடுகின்றனர். ஒற்றுமையாக வாழ்ந்திருக்க வேண்டிய இனங்களை அரசியலும், பரஸ்பர சந்தேகமும் பிரித்து விட்டன. முப்பதாண்டு கால யுத்தம் முடிவுக்கு வந்த பிறகும் நம் நாட்டில் இயல்பு வாழ்க்கை திரும்பியதோடு இனங்களுக்கிடையே புரிந்துணர்வும் ஏற்பட்டிருக்கிறது. 
https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEh96_nAfNudnPoSfdRoqLtVkbI5TcrHhTc-GLYpcqxo8RyZnqM5WUM-1whk4Xonl1I6Rx0ET-SIGhxJtJExZ1pO6x5JHseNtbjjbqAOgSrg3QvhG_YPRMSGEVyCCOA2L5hRYIa2Vvtl6ouf/s1600/006.jpg

ஆனால் தமிழக ஊடகங்கள் தான் இன்னும் இங்கு பிரச்சினை இருப்பது போன்று தோற்றத்தை காட்டிவருவதோடு இலங்கைக்கு செல்லும் கலைஞர்களையும் படப்பிடிப்பு குழுவினரையும் தடுத்தும் வருகிறது. இலங்கை பற்றிய சாதகமற்ற ஒரு தோற்றத்தை இது தமிழகத்தில் தோற்றுவித்துள்ளது. அதனையும் மீறி இந்தியர்கள் இங்கு வந்து கொண்டுதான் இருக்கிறார்கள். 

அப்படி அண்மையில் தமிழகத்திலிருந்து வந்தவர்களில் ஒருவர் தான் உனகலதேவயாலகே சந்திராவதி. இவர் கம்பஹா ஹேனகமையை பிறப்பிடமாக கொண்டவர். எலிஸ்நோனாவின் ஒரே மகள். நாற்பது ஆண்டுகளுக்கு முன்பு தமிழரான செல்லதுரையை திருமணம் முடித்து தமிழகத்திற்கு சென்றவர். தனது பாசத்திற்குரிய தாயை கடந்த நாற்பதாண்டுகளாக பிரிந்திருந்தவர், அண்மையில் இலங்கைக்கு வந்து தனது 98 வயது நிரம்பிய தாயை சந்தித்திருக்கிறார் இந்த நெகிழ்ச்சியான சம்பவம் கடந்த மாதம் இங்கிரிய, றைகமையில் நடைபெற்றது. 

தனது தாய் உயிரோடு இருக்கிறாரா இல்லையா என்பதையே அறியாத அறுபது வயதான சந்திராவதி தன் கணவர் செல்லதுரையுடன் இங்கிரிய, றைகமைக்கு வந்து செல்லதுரையின் உறவினர்கள் வீட்டில் தங்கி, தனது தாயை தேடுவதில் ஈடுபட்டார். கம்பஹா, ஹேனகமையில் வசிக்கும் தெரிந்தவர்களிடம் சொல்லி விசாரித்ததில் சிலர் எலிஸ் நோனா, இறந்து விட்டதாகவும், இல்லை அவர் உயிரோடுதான் இருக்கிறார் என்றும்பலதரப்பட்ட செய்திகள் கிடைத்தன. பிறகு நீண்டதொரு தேடலுக்கு பிறகு எலிஸ் நோனா உயிரோடு இருப்பதும் அவர் நூறு வயதை நெருங்கி கொண்டிருப்பதையும் தெரிந்து கொண்டார் சந்திரவதி. 
https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhYhyphenhyphenqiRvTL0-VAfQ2F-agd08TqV4f2w5MLXK9L7aHcOEysYc8gejD9k7GwttAaFUbLJ4iG_jA6hvGyUuLN74yTswIBOqmssGFoQ3urJO_SWOi0x3E6gqbx8bGS77lTG6c8-LfFsrRaPXdz/s1600/007.jpg
தனது தாயாருடன்,சந்திரா

கம்பஹா ஹேனகமை பெரும்பான்மை இன மக்கள் அதிகமாக வாழும் பிரதேசம். தமிழர்களை அங்கு காண்பதே அரிது. அந்த இடத்திற்கு சந்திரவதியை எப்படி அழைத்துச்செல்வது? நாற்பதாண்டுகால இடைவெளியில் சந்திரா சிங்கள மொழியை மறந்துவிட்டார். பேசுவது புரிந்தாலும் அவரால் பதில் சொல்ல முடியாது. நமக்கும், அவர்களிடம் சென்று சந்திராவை அறிமுகம் செய்வதில் ஒரு தயக்கம் இருந்தது. 

எப்படியோ பெரு முயற்சியின் பலனாக எலிஸ்நோனா வசித்து வந்த வீட்டாரிடம் தொலைபேசியில் தொடர்பு கொண்டு நிலைமையை சொல்லி எலிஸ்நோனாவை அழைத்து வர ஏற்பாடு செய்யப்பட்டது. 

எலிஸ்நோனா இங்கிரிய றைகமைக்கு வரப்போகும் செய்தி காட்டுத் தீ போல அந்தப்பிரதேசத்தில் பற்றிக்கொண்டது. எலிஸ்நோனா கம்பஹாவை பிறப்பிடமாக கொண்டிருந்தாலும் றைகமையில்தான் பல வருடங்கள் வாழ்ந்திருந்தார்கள். 

எலிஸ்நோனாவின் உயரம் 5.5. நரைத்தலையுடன் சிங்கள கலாசார உடையான சீத்தை ரவிக்கை சகிதமாக கையில் 'கெத்த' என அழைக்கப்படும் கோப்பிக்கத்தி சகிதமாக உலா வருவார். பலருக்கு இவரைக்கண்டாலே பயமாம். சிறுவர்கள் பயந்து நடுங்குவார்களாம். 

ஆச்சி பலாக்காயை கொண்டு வந்து அதை வெட்டும் அந்த லாவகம் யாருக்கும் வராது என்பார்கள். அவர் பலாக்காய் வெட்டி சுத்தப்படுத்துவதை வேடிக்கையாக அந்தக்காலத்தில் பார்த்திருக்கிறார்கள். அப்பம் சுடுவதிலும் எலிஸ் கெட்டிக்காரிதான். அடுப்பில் தாச்சியை வைத்து அதற்கு மேழும் ஒரு நெருப்புச்சட்டி வைத்து அவர் அப்பம் சுடுவது ஒரு தனி ஸ்டைல். எலிஸ் நோனாவிற்கு அந்தக்காலத்தில் சண்டியர்களோடுதான் சினேகமாம். பொலிஸாருக்கே டிமிக்கி கொடுத்துவிட்டு சண்டியர்களுக்கு எலிஸ்தான் தனது வீட்டில் அடைக்கலம் கொடுத்து வந்தார் என்கிறார்கள்.

இப்படியான ஒரு'கெரக்டர்' நாற்பதாண்டுகளுக்கு பிறகு அந்த ஊருக்கு வருகிறார் என்பது பரபரப்பான விஷயமாகத்தானே இருக்க வேண்டும்!. சந்திராவிற்கும் சந்தோசம் தாங்க முடியவில்லை. தன் தாயை காணும் சந்தோசத்தில் சந்திரா தூக்கத்தை தொலைத்திருந்தார். காலைப்பொழுதானதும் கம்பஹாவிலிருந்து புறப்பட்டு வந்த அந்த வேன் றைகமையில் வந்து நின்றது. எலிஸ் நோனாவின் உறவினர்கள் அவரை அழைத்து வந்திருந்தார்கள். ராஜகம்பீரத்தோடு மன்னைக்கத்தியுடன் உலா வந்த அந்த எலிஸ் நோனாவை காணவில்லை. நாலடி உயரத்தில் எழும்பில் சதை ஒட்டிக்கொண்டிருக்க கையில் தடியுடன் கூன் வளைந்த முதுகுடன் எலிஸ் நோனா வேனை விட்டு கீழே இறங்கினார். தாயை கண்ட மகள் சந்திரா எலிஸ் நோனாவின் காலை பிடித்துக்கொண்டு கதறினார். அவர் போட்ட சத்தம் அந்த ஊரையே கூட்டியது. எலிஸ் நோனாவை பார்க்கும் ஆவலில் பலர் முண்டியடித்துக்கெண்டிருந்தார்கள். தாய் சிங்களத்தில் பேசும்போதும் அதை விளங்கி பதில் சொல்ல முடியாமல் சந்திரா தவித்தது அங்கு கூடியிருந்தவர்களை கண்கலங்க வைத்தது. இருவரும் முகபாவங்களில் தமது அன்பை வெளிப்படுத்திக்கொண்டிருந்தார்கள். நாற்பத்தைந்து ஆண்டு காலமாக பிரிந்தவர்கள் ஒன்று சேர்ந்தால் கேட்கவா வேண்டும்..!

எலிஸ் நோனாவிற்கு வயது போயிருந்தாலும் அவரது அந்த மிரட்டும் குரல் தொனி இன்னும் அப்படியே தான் இருக்கிறது. ஆச்சி இப்பவும் சண்டி தான் என்று அவரை அழைத்து வந்தவர்கள் கூறினார்கள். பிறகு எலிஸ் நோனா தனது மகளை சில நாட்கள் வந்து தம்முடன் தங்கும்படி அழைக்க, சந்திராவும் தனது தாயுடன் கம்பஹாவுக்கு சென்றார். அங்கே தனது உறவினர்களுடனும் தாயுடனும் ஒரு வாரத்தை கழித்துவிட்டு திரும்பியிருக்கிறார். இப்போது சந்திரா ஓரளவுக்கு சிங்களம் பேசுகிறார். 

நான் சின்ன வயதில் கம்பஹாவில் தான் இருந்தேன். அங்கே உள்ள ஒரு சிங்கள ஆரம்ப பாடசாலையில் தான் படித்தேன். எனது பாட்டி சந்தையில் வியாபாரம் செய்து வந்தார். அவருடன் காலை மூன்று மணிக்கே காய்கறி கூடையை தூக்கிக்கொண்டு சந்தைக்கு புறப்பட்டுவிடுவேன். பாட்டி பெரிய தீப்பந்தத்துடன் முன்னால் செல்ல நான் பின்னால் கூடையை தலையில் வைத்து தூக்கிச்செல்வேன். ஒரு நாள் எனது சின்னம்மா வீட்டில் இருந்து ஒரு பத்து ரூபா நோட்டை திருட்டுத்தனமாக எடுத்து வந்து எனது நண்பிகளுக்கு வளையல், இனிப்பு போன்ற பொருட்களை வாங்கிக்கொடுத்து விட்டு மிச்சமிருந்த ஆறு ரூபாவை எனது பாடப்புத்தகத்தில் வைத்துவிட்டேன். இதை கண்டுவிட்ட எனது சின்னம்மா என்னை அடி பின்னியெடுத்துவிட்டார். வலி தாங்காமல் எனது பாட்டி வீட்டிற்கு ஓடினேன். நான் எவ்வளவு பணம் எடுத்தேன் என்பது எனக்கு தெரியாது. அதனால் எனது பாட்டி அவரிடம் இருந்த பணத்தையெல்லாம் தரையில் போட்டு இதில் எந்த பணத்தை எடுத்தாய் என்று கேட்டு அடித்தார். 
https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhRqDYuEmslWgp2WAPpDRHl6i5ubsLlz0oIy-9u7M26MPZnxgTPEGblOJZlGCp_XfYNALkn2C-3Z2ut0du-9YYRC4farDXOIRpvOYp1nScRSYFpQftqsYd8zL14uYkKeKqYIlMIQp9Z5EFU/s1600/008.jpg
தாய்,மகள்,மருமகன்

பிறகு என் அம்மாவை வரச்சொல்லி கடிதம் போட்டார்கள். இங்கிரியாவிலிருந்து அம்மா வந்தவுடன் நானும் அம்மாவுடனேயே புறப்பட்டு சென்றுவிட்டேனஎன்கிறார் சந்திரா. இத்துடன் அவரது கம்பஹா வாழ்க்கை முடிவுக்கு வந்துவிட்டது. அன்று என் அக்காவுக்கு அப்படி அடி கிடைத்ததினால் தான் அவர் செல்லத்துரைக்கு மனைவியாக கிடைத்தார்.என்று சிரிக்கிறார் சந்திராவின் சின்னம்மாவின் மகனான சிரிவர்தன. 

அக்கா தான் அந்த நாட்களில் என்னை அவரின் மடியில் அமர வைத்துக்கொண்டு எனக்கு பாட்டு சொல்லித்தருவார்என்ற சிரிவர்தன இன்னொரு உண்மையையும் எமக்குச்சொன்னார். 

உங்கள் ஊருக்கு வருவதற்கு எங்களுக்கு அச்சமாகத்தான் இருந்தது. தமிழர்கள் பெரும்பான்மையாக வசிக்கும் இந்தப்பகுதிக்கு நாங்கள் வந்து ஏதும் ஆபத்தில் மாட்டிக்கொள்வோமா என்று பயந்தது உண்மை தான். 

பிறகு எனது பெரியம்மா (எலிஸ் நோனா) இருக்கும் தைரியத்தில் தான் வந்தோம். வந்த பின்னரேயே தமிழர்கள் எவ்வளவு நல்லவர்கள் என்பது தெரிந்தது. என் பெரியம்மா மீது அவர்கள் எவ்வளவு பாசம் வைத்திருக்கிறார்கள் என்பதும் புரிந்தது. நம்மை அரசியல்வாதிகள் தான் பிரித்துவிட்டார்கள”; என்று பெருமூச்சு விட்டார் சிறிவர்தன. நாமும் கம்பஹா ஒரு சிங்கள ஏரியா என்பதால் அங்கு வருவதற்கு ரொம்பவும் யோசித்தது பற்றி அவரிடம் மனம் திறக்கவும் சிரிவர்தன சிரித்தார். ஒரே நாட்டில் வாழ்ந்தாலும் தமிழர்களும் சிங்களவர்களும் எவ்வளவு தவறான புரிதலையும் சந்தேகத்தையும் கொண்டிருக்கிறார்கள் பார்த்தீர்களா! 

தாய்மொழி மற்றும் தாய் நாட்டைப்பிரிந்த சோகம் பற்றி சந்திராவதியிடம் வினவினோம்.

தமிழ் நாட்டில் நான் வசித்தாலும் எனது மொழி, எனது உறவினர்கள் பற்றிய ஏக்கம் எனக்கு அடிக்கடி வந்து போகும். கடவுளின் கிருபையால் என் தாயையும், தாய் நாட்டையும் பார்க்கவும் என் தாய்மொழியை கேட்கவும் கிடைத்ததை பெரிய பாக்கியமாக நினைக்கிறேன்.என்றார் சந்திராவதி. தமிழகத்தில் வசித்துவரும் சந்திராவதிக்கு மூன்று பெண்கள் இரண்டு ஆண்கள். அவர்கள் தமிழ்நாட்டு தமிழர்களாகவே மாறிவிட்டார்களாம். சிங்களம் தெரியாது.
மீண்டும் தமது உறவுகள் இலங்கையில் கிடைத்த சந்தோசத்தில் சந்திராவதியும், இந்தியாவில் தமக்கு புது உறவு கிடைத்து விட்ட சந்தோசத்தில் எலிஸ் நோனாவின் உறவினர்களும் மகிழ்ச்சியுடன் விடைபெற்றார்கள்.